×

ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை: கொலை தொடர்கதையாவதால் பதற்றம்

க்வீடோ: ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஈக்வடார் நாட்டின் மேயர் 27 வயது பிரிஜிட் கார்சியா. இவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மேயர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா(27) மற்றும் அவருடன் சென்ற தகவல்தொடர்பு இயக்குநர் ஜெய்ரோ லூர் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது. இருவரது சடலங்களும் கார் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அரசியல்வாதிகளை அடுத்தடுத்து கொன்றுவருது பதற்றத்தை ஏற்படுத்தியள்ளது. கார்சியாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது.

The post ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை: கொலை தொடர்கதையாவதால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Ecuador ,Brigitte Garcia ,Quito ,mayor ,Brigitte ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...