×

கிருஷ்ணசாமி ‘இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்?.. எந்த சின்னத்தில் போட்டி?.. இன்று மீண்டும் ஆலோசனை

தென்காசி: அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அதிமுக, புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கிருஷ்ணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் இருந்து கிருஷ்ணசாமி தரப்பில் இருந்து உறுதி ஏதும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. நாளை கிருஷ்ணசாமி மனுத்தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது குறித்து முடிவு செய்ய இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

The post கிருஷ்ணசாமி ‘இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்?.. எந்த சின்னத்தில் போட்டி?.. இன்று மீண்டும் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Krishnasamy ,TENKASI ,NAGAM ,KRISHNASAMI ,Aktatani ,Tenkasy ,
× RELATED குற்றால அருவிக்கு வரும்...