×
Saravana Stores

மாணவர் சங்க தேர்தலில் ஜேஎன்யூ வெற்றிக்கு வாழ்த்து இந்திய மக்கள் பாஜவை வீழ்த்துவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜேஎன்யூ அமைப்பினருக்கு வாழ்த்து தெரிவித்து, இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து பாஜவை வீழ்த்துவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள். ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் ஸ்வாதி சிங்கின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட்கக் கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், ஜேஎன்யூ மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர். வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பாஜவை வீழ்த்துவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மாணவர் சங்க தேர்தலில் ஜேஎன்யூ வெற்றிக்கு வாழ்த்து இந்திய மக்கள் பாஜவை வீழ்த்துவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : JNU ,student union election ,BJP ,Chief Minister ,M.K.Stalin ,Dewitt ,CHENNAI ,Delhi Jawaharlal Nehru University Students' Union elections ,M. K. Stalin ,India ,student union elections ,
× RELATED அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட...