×

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர்ராஜ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, எழுத்துதேர்வு கடந்த 27.5.2023 நடத்தப்பட்டு, மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 19.9.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை சென்னை டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரரின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதற்கான விவரம் எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வர தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TNPSC ,Gopala Sundarraj ,Integrated Engineering Subordinate Services ,Dinakaran ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்