×

ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு சரமாரி அடி உதை: வடமாநில வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஹோலி கொண்டாட்டத்தின் போது கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு சரமாரியா அடி உதை விழுந்தது. போலீசார் 5 வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சென்மேரீஷ் தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் – புஷ்பா தம்பதியரின் மகன் குடியரசன் (21). இவர் சென்னையில் உள்ள நந்தனம் கலைக் கல்லூரியில் எம். காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரி சென்ற குடியரசன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த சுமார் 20 வட மாநிலத்தவர்கள் கல்லூரி மாணவர் குடியரசு மற்றும் அவருடன் வந்த சகக்கல்லூரி மாணவன் தினேஷ் ஆகியோரை வழிமறித்து மதுபோதையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த குடியரசு, தினேஷ் ஆகியோர் தலையில் பழைத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் அக்கம்பாக்கத்தினர் உடனடியாக மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கேள்விபட்டதும் சம்பவ இடத்தில் குவிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் வடமாநில தொழிலாளர்களை சுற்றி வளைத்தனர் அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால் அங்கிருந்த அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 20க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை தனி அரையில் சிறை பிடித்தனர்.

இதை அறிந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் உறவினர்கள் கூட்டம் ஒரே இடத்தில் குவிந்ததால் வட மாநிலத்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதில் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், இதுகுறித்து ரவீந்திரன் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதன் அடிப்படையில், 5 வடமாநில வாலிபர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு சரமாரி அடி உதை: வடமாநில வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Holi ,North State ,Kummidipoondi ,Ravindran ,Pushpa ,Kummidipoondi Senmerish Street ,
× RELATED கஞ்சா விற்று வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது