×

முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான்.. வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!!

சென்னை: முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவு பெறும் நிலையில், திமுக, அதிமுக மற்றும் பாஜகவின் வேட்பாளர்கள் இன்று ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்ய குவிந்தனர். இதனால் அனைத்து தேர்தல் அலுவலகங்கள் முன்பும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அதன்படி, வட சென்னை தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வந்தனர். இதனால், யார் வேட்பு மனுவை முதலில் பெறுவது என குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் அலுவலருக்கு முன்பு போடப்பட்ட நாற்காலியில் அமைச்சர் சேகர்பாபு, கலாநிதி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப்போது பின்புறம் நின்றுகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தாங்கள் தான் முதலில் வந்ததாகவும் தாங்களே முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

ஆனால் இதனை மறுத்த அமைச்சர் சேகர்பாபு, “நாங்களே முதலில் டோக்கன் வாங்கினோம். அதனால் எங்கள் வேட்புமனுவைத்தான் முதலில் வாங்க வேண்டும்” என்று பிடிவாதமாகக் கூறினார். இதனால் யார் வேட்புமனுவை முதலில் வாங்குவது என தேர்தல் அதிகாரி குழப்பமடைந்தார். இதனால் சேகர்பாபு மற்றும் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு;

பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கற்பனையாக ஏதாவது குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார். வேட்புமனு தாக்கலின்போது பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்குள்ளேயே இல்லை. பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள்ளேயே இல்லாமல் எப்படி புகார் கூறலாம்?. கலாநிதி வீராசாமிக்கு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜெயந்தி காலை 9 மணிக்கே டோக்கன் பெற்றுவிட்டார். முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான் என்றும், அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு செய்கின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டினார். மேலும், முதலில் அலுவலகத்துக்குள் சென்றவர்கள் நாங்கள்தான், நாற்காலியில் அமர்த்தவர்களும் நாங்கள்தான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

 

The post முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான்.. வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Dima ,Minister ,Sekharbhabu ,Chennai ,Sekarbabu ,Dimuka ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...