×

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது!

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் தேதி சேப்பாக்கத்திலும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17வது சீசனுக்கான முதல் பாதி போட்டிகளுக்கான அட்டவணை கடந்த மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார். தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியாக உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.

இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும், முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் தேதி சேப்பாக்கத்திலும் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 6வது லீக் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

The post ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது! appeared first on Dinakaran.

Tags : IPL ,Sepakkam Stadium ,Chennai ,AHMEDABAD ,Dinakaran ,
× RELATED 2-வது தகுதிச்சுற்று: சன்ரைசர்ஸ்...