×

முந்திரி அப்பம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்,
முந்திரி – கால் கப்,
சர்க்கரை – 1¼ கப்,
தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்,
பால் – முக்கால் கப்,
நெய் (அ) எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை

பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைக்கவும். முந்திரி, தேங்காய்த்துருவலை பால் சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையில் அரைத்து சலித்த அரிசி மாவையும் சேர்த்து பஜ்ஜி பதத்திற்கு கலந்துகொள்ளவும். தேவையென்றால் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் / நெய் சேர்த்து சூடானதும், சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயின் நடுவில் ஊற்ற வேண்டும். ஒவ்வொன்றாகத்தான் ஊற்ற வேண்டும். அப்பம் மேலே வந்தவுடன் அதை லேசாகத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து எண்ணெயை வடியவிடவும். மெத்தென்று இருக்கும்போதே எடுத்து விட வேண்டும். அவ்வளவுதான், சுவையான முந்திரி அப்பம் தயார்.

The post முந்திரி அப்பம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு