×

மதுரையில் தனியார் உணவகம் சார்பில் சீன உணவுத் திருவிழா.. வாடிக்கையாளர்களை கவர்ந்த சீன டிராகன், நீராவி மட்டன் பன், வறுத்த வாத்து உணவுகள்..!!

மதுரை: கறி விருந்து, பரோட்டா, பிரியாணி போன்ற பல ருசியான உணவுகளை ருசித்து மகிழ்ந்த மதுரை மக்களின் தற்போது சீன உணவுகளும் இடம்பெறுள்ளன. வித்யாசமான உணவுகளை ருசித்து பார்க்கும் மதுரை உணவு பிரியர்கள் ரசித்து, ருசித்து சாப்பிட பிரபல தனியார் உணவகத்தில் சீன திருவிழா உணவகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழாவில் 60கிலோ வெண்ணையில் 6அடி அகலம், 3அடி உயரம் கொண்ட சீனாவின் சிவப்பு நிற டிராகன் உருவத்தில் தயார் செய்யப்பட்டு இருந்தது. இது உணவு பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த உணவு திருவிழாவில் சீனாவில் புகழ்பெற்ற சைவ, அசைவ உணவுகளில் 50 வகைகளை ருசிக்க முடியும். குறிப்பாக சீனாவின் பாரம்பரிய உணவான நீராவி மட்டன் பன், சீனாவின் தேசிய உணவான வறுத்த வாத்து, பிரைடு சிக்கன் உணவுகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தன. குசின் எனப்படும் தனித்துவ உணவான சீனா சான்டான், செஸ்வான், ஹீனான் போன்ற உணவுகளும் தயார் செய்யப்பட்டது. அதேபோல வெற்றிலை, மூங்கில் தண்டு, லெமன் கிராஸ், பச்சை இஞ்சி கொண்டு செய்யப்படும் வெற்றிலை சிக்கனை வாடிக்கையாளர்கள் ஒருபிடி பிடித்தனர். மதுரையில் முதன்முறையாக நடைபெற்ற சீன உணவுத் திருவிழா உணவு பிரியர்களான மதுரை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

The post மதுரையில் தனியார் உணவகம் சார்பில் சீன உணவுத் திருவிழா.. வாடிக்கையாளர்களை கவர்ந்த சீன டிராகன், நீராவி மட்டன் பன், வறுத்த வாத்து உணவுகள்..!! appeared first on Dinakaran.

Tags : food ,Madurai ,
× RELATED நீலகிரி ஓட்டல்களில் கெட்டுப்போன,...