- ராவுடி
- தேயிலை
- நாகப்பட்டினம்
- ரவிச்சந்திரன்
- நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதி
- டீகாடா
- பரவா
- வேலங்கணி
நாகப்பட்டினம், மார்ச் 25: நாகப்பட்டினத்தில் முதியவர் கொலை வழக்கில் கைதான ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(55). இவர் வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் கருவேலங்கடை பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தெற்குபொய்கை நல்லூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த நடைவண்டிமோகன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இவர் மீது வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்கு நிலையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி ஹர்ஷ்சிங் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் உத்தரவின் பேரில் நடைவண்டிமோகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
The post ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் டீ மாஸ்டர் கொலையில் கைதான ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.