×

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா

 

ஓசூர், மார்ச் 25: ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலை கோயில் தேர்த்திருவிழா இன்று (25ம் தேதி) நடக்கிறது. தேர்த்திருவிழாவில் அண்டைய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, நேற்று ரிஷப வாகனத்தில் சாமி பவனி வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தேர்ப்பேட்டையில் நடைபெற உள்ளதால், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில், 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேரை பார்த்து விட்டு ஏரிக்கரையின் மீது பக்தர்கள் வெளியேற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கருவூல அலுவலகம் எதிரில் உள்ள சாலை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

 

The post ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Hosur Chandrasudeswarar temple festival ,Hosur ,Chandrasudeswarar hill ,Hosur Chandrasudeswarar Hill Temple Selection Festival ,Chandrasudeswarar ,Temple ,Therthiruvizha ,
× RELATED மரக்கன்றுகள் நடும் விழா