×

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கரூர் நாடாளுமன்ற திமுக பொறுப்பாளர் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்

 

கரூர், மார்ச்25: தமிழகம் முழுதும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட நாடாளுமன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் ராஜ்யசபா உறுப்பினர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. கரூர் வடக்கு பகுதி செயலாளர் கரூர் கணேசன் வரவேற்றார். கூட்டத்திற்கு மாநகர செயலாளர் கனகராஜ், சட்டப் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் மணிராஜ், துணை மேயர் தாரணி சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காலனி செந்தில், சாலை சுப்பிரமணியன், மாநகர பகுதி செயலாளர்கள் கரூர் கணேசன் வக்கீல் சுப்பிரமணியன், ராஜா, ஜோதி பாசு, . குமார், மாநகர துணைச் செயலாளர் வெங்கமேடு பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு ,மகேஸ்வரி, தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன்,பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கே கருணாநிதி, அமைப்பாளர் வெங்கமேடு சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ் கண்ணு, சிவகாமசுந்தரி மாவட்ட பொருளாளர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா பேசுகையில்,கரூர் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ்வேட்பாளரான ஜோதிமணி வெற்றிக்குநாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சின்னசாமி, தமிழ்நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில நெசவாளர் அணி செயலாளர் விசா சண்முகம். மாவட்ட செயலாளர் மூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகர மாவட்ட பொறுப்பாளர் பார்த்திபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாட்ராயன், மார்க்சிய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஜோதி பாசு, மதிமுக துணை செயலாளர் சண்முகம் கலந்து கொண்டனர். மேலும் கரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வேலுச்சாமி, கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, நெடுந்தூர் கார்த்தி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாநகரத் துணைச் செயலாளர் அறிவின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கரூர் நாடாளுமன்ற திமுக பொறுப்பாளர் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur Parliamentary ,DMK ,Karur ,Tamil Nadu ,Karur Kalainar Vidyalaya ,Dinakaran ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...