×

வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும் தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல் தபால் வாக்கு செலுத்த தவறிய அரசு அலுவலர்கள் மீண்டும் இன்று வாக்களிக்கலாம்

கரூர்,ஏப்.16: கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்கு செலுத்த தவறிய அரசு அலுவலர்கள் மீண்டும் இன்று (16ம்தேதி) வாக்களிக்கலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர், வாக்குச்சாவடி பணியாளர்கள், நுண்ணறிவு மேற்பார்வை அலுவலர்கள், ஏற்கனவே உதவி மையத்தில் வாக்களிக்க தவறியவர்கள், தங்கள் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய ஏதுவாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் இன்று (16ம்தேதி) காலை 7 மணி முதல் செயல்பட உள்ளது. மேலும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு பணம்பட்டியில் உள்ள குமரன் பாலிடெக்னிகிலும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறையில் உள்ள லட்சுமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளது.

இந்த வசதியினை காவல்துறையினர் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

The post வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும் தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல் தபால் வாக்கு செலுத்த தவறிய அரசு அலுவலர்கள் மீண்டும் இன்று வாக்களிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Parliamentary Constituency ,Election Officer ,Tangvel ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்