×

பாம்பன் பாலத்தில் கிடக்கும் சேதமான மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை

 

மண்டபம்,மார்ச் 25: மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இனைக்கு வகையில் பாம்பன் கடலில் 2.5 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் கடலில் தூண்கள் அமைத்து சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் சில இடங்களில் சோலார் விளக்குகளுடன் வாகன ஓட்டுனர்கள் அறியும் வகையில் வாகன விதிமுறை குறியீடு மின்கம்பம் பாலத்தின் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் கடல் காற்றுத் தன்மையை ஏற்பட்டு சேதம் அடைந்து மின் கம்பம் முறிந்து நடை மேடையில் கீழே விழுந்தது.

இதுபோல பாலத்தில் பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றாலும் ஆங்காங்கே பொருள்களை பணியாளர்கள் விட்டுச் சென்று விடுவார்கள். இந்த பாலத்தில் தினசரி ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாலத்தில் நின்று கடல் மற்றும் ரயில் பாலத்தின் அழகுகளை ரசிப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பாலத்தில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் எதிர்பாராமல் நடமேடையில் கிடக்கும் தேவையற்ற பொருட்கள் மீது மோதி காயங்கள் ஏற்படுகிறது. இதனால் பாம்பன் சாலைப்பாலத்தில் கிடக்கும் தேவையற்ற ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை உடனடியாக அகற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

The post பாம்பன் பாலத்தில் கிடக்கும் சேதமான மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pampan Bridge ,Mandapam ,Pampan ,Rameswaram island ,Dinakaran ,
× RELATED பாம்பன் சுவாமி கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை