×

வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள மொத்தம் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவித்த மாநில அரசு, ஒன்றிய அரசிடமிருந்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதுதொடர்பாக ஒன்றிய குழுவை அனுப்பி ஆய்வு செய்த ஒன்றிய அரசு, வறட்சி நிவாரணம் மட்டும் வழங்கவில்லை. ஒன்றிய அரசு வறட்சி நிவாரண நிதி வழங்காத நிலையில், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணம் வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. ஹோலி பண்டிகையையொட்டி ஏப்ரல் 3 வரை உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் விடுமுறை கால அவசர மனுவாக இதை ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

The post வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு appeared first on Dinakaran.

Tags : EU ,Karnataka government ,Supreme Court ,Bangalore ,Karnataka state government ,Karnataka ,EU government ,Dinakaran ,
× RELATED செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு...