×

வங்கதேசத்துக்கு 511 ரன் இலக்கு: தனஞ்ஜெயா கமிந்து ஜோடி மீண்டும் அசத்தல்

சிலெட்: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், 511 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்து திணறி வருகிறது. சிலெட் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 280 ரன் குவித்தது. கேப்டன் தனஞ்ஜெயா, கமிந்து மெண்டிஸ் தலா 102 ரன் விளாசினர். வங்கதேசம் முதல் இன்னிங்சில் 188 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 92 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 418 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  கருணரத்னே 52 ரன் எடுக்க, கேப்டன் தனஞ்ஜெயா 108, கமிந்து மெண்டிஸ் 164 ரன் விளாசி சாதனை படைத்தனர். வங்கதேச பந்துவீச்சில் மிராஸ் 4, தைஜுல், ராணா தலா 2, ஷோரிபுல், காலித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 511 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 8.4 ஓவரில் 37 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஜாகிர் 19, ஷான்டோ 6 ரன் எடுக்க… ஜாய், ஷகாதத், லிட்டன் தாஸ் டக் அவுட்டாகினர். 3ம் நாள் முடிவில், வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்துள்ளது (13 ஓவர்). மோமினுல் 7, தைஜுல் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post வங்கதேசத்துக்கு 511 ரன் இலக்கு: தனஞ்ஜெயா கமிந்து ஜோடி மீண்டும் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhananjaya Kamindu ,Sylhet ,Sylhet International Stadium ,Dinakaran ,
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...