×

உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிப்பது நாட்டுக்கு உகந்ததல்ல: திருமாவளவன் காட்டம்

சென்னை: உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிப்பது நாட்டுக்கு உகந்ததல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும். சட்ட ரீதியாகப் போராடி வெற்றி கண்ட பொன்முடி , தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால் தமிழிசை செய்ததைப் போல பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதுதான் முறை. அதை விட்டுவிட்டு ஆளுநர் பதவியில் இருந்து கொண்டே ஒரு அரசியல்வாதியைப் போல செயல்படுவதும், அரசமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதும் ஏற்புடையது அல்ல. இப்போது உச்ச நீதிமன்றம் கண்டித்தது போல இதுவரை எந்த ஆளுநரையும் உச்ச நீதிமன்றம் இதுவரை கண்டித்தது இல்லை. இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. அவர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும்.

 

The post உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிப்பது நாட்டுக்கு உகந்ததல்ல: திருமாவளவன் காட்டம் appeared first on Dinakaran.

Tags : RN ,Ravi ,Supreme Court ,Thirumavalavan Kattam ,CHENNAI ,Vishika ,President ,Thirumavalavan ,Governor of Tamil Nadu ,Ponmudi ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து