×
Saravana Stores

சன்ரைசர்ஸ் அணிக்கு 209 ரன் இலக்கு: ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்

கொல்கத்தா: கேகேஆர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 209 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க வீரர்களாக ஃபில் சால்ட், சுனில் நரைன் களமிறங்கினர். சுனில் நரைன் 2 ரன் எடுத்து ரன் அவுட்டாக, வெங்கடேஷ் ஐய்யர் (7 ரன்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (0) இருவரும் நடராஜன் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நிதிஷ் ராணா 9 ரன் எடுத்து மார்கண்டே பந்துவீச்சில் திரிபாதி வசம் பிடிபட, கேகேஆர் 7.3 ஓவரில் 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஃபில் சால்ட் – ரமன்தீப் சிங் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. உறுதியுடன் விளையாடிய சால்ட் அரை சதம் அடித்தார். மறுமுனையில் ரமன்தீப் அதிரடியாக 35 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் மார்கண்டே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சால்ட் 54 ரன் (40 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விடை பெற்றார். கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் – ஆந்த்ரே ரஸ்ஸல் இணைந்து அதிரடியில் இறங்க, கேகேஆர் ஸ்கோர் 200 ரன்னை கடந்தது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்து மிரட்டியது. சிக்சர் மழை பொழிந்த ரஸ்ஸல் 20 பந்தில் அரை சதம் விளாசினார்.

ரிங்கு சிங் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. ரஸ்ஸல் 64 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டார்க் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் நடராஜன் 3, மார்கண்டே 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

The post சன்ரைசர்ஸ் அணிக்கு 209 ரன் இலக்கு: ரஸ்ஸல் அதிரடி ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Sunrisers ,Russell ,Kolkata ,Sunrisers Hyderabad ,IPL league ,KKR ,Pat Cummins ,Eden Gardens ,Dinakaran ,
× RELATED 2025 சீசன் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ், டெல்லி அணி தக்க வைக்கும் வீரர்கள்