×

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 20-ம் தேதி டெல்லி முதல்வர்அரவிந்த் ஜெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். அவரை நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டார். அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மதுபான கொள்கை முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மூளையாக செயல்பட்டதாகவும், கோவா சட்டப்பேரவை தேர்தலுக்காக மதுபான கொள்கையின் மூலம் பெறப்பட்ட நிதியானது மாற்றப்பட்டு, சுமார் ரூ.45 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த அவரை 10 நாட்களில் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திய வரலாற்றில் முதன் முறையாக முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வாக்குமூலத்தை தவிர ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் 4 பேர் கைது செய்யபட்டிருப்பது மக்களவை தேர்தலில் சமவாய்ப்பு மறுப்பதாக வாதிட்டார். இருப்பினும் இந்த வாதத்தை நிராகரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் காவல் விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Arvind Kejriwal ,State High Court ,Delhi ,Arvind Jejriwal ,Enforcement Department ,Delhi CBI Special Court ,Dinakaran ,
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...