×

நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் நிராகரிப்பு: குடியரசு தலைவர் கடிதம்

டெல்லி: நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அரசாணை மூலம் பெயர் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுகமும், தரங்கம்பாடி கிராமத்தில் ரூ.120 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 3 மீன் இறங்குதளங்கள் 12 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும், கேசவன்புத்துறை மீனவர்களின் வாழ்வாதரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார். தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரையை நிராகரித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார். மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரிடம் தீர்மானம் கிடப்பில் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநர் அனுப்பிய பரிந்துரையை நிராகரிப்பதாக அரசுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார்.

The post நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் நிராகரிப்பு: குடியரசு தலைவர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nagai Aquaculture University ,Jayalalitha ,President of the ,Delhi ,President ,Traupati Murmu ,Nagai Fisheries University ,Nagapattinam, Tamil Nadu ,Tamil Nadu ,President of the Republic ,
× RELATED சொல்லிட்டாங்க…