நாமக்கல், மார்ச் 23: நாடாளுமன்ற ேதர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கலெக்டர் தலைமையில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்குசாவடிகளில் பயன்படுத்துவதற்காக, தேர்தல் ஆணையத்தால் 3,995 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,301 வாக்காளர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்காக, இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில், முதற்கட்டமாக நேற்று நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், 261 வாக்குச்சாவடிகளுக்கு 313 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 261 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 339 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. சேந்தமங்கலம் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளின் பயன்பாட்டிற்காக, 340 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 369 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 1,049 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளின் பயன்பாட்டிற்காக, 289 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 20 சதவீதம் தயார் நிலையில் (Reserved) 57 இயந்திரங்களும் என 346 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 289 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 20 சதவீதம் தயார் நிலையில் 57 இயந்திரங்களும், 289 விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதம் தயார் நிலையில் 86 இயந்திரங்கள் என 375 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 1,066 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பரமத்திவேலூர் தொகுதியில் 254 வாக்குச்சாவடிகளின் பயன்பாட்டிற்காக, 254 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 20 சதவீதம் தயார் நிலையில் 50இயந்திரங்களும் என 304 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 254 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 20 சதவீதம் தயார் நிலையில் 50 இயந்திரங்களும், 254 விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதம் தயார் நிலையில் 76 இயந்திரங்கள் என 330 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 938 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. திருச்செங்கோடு தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளின் பயன்பாட்டிற்காக 261 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 20 சதவீதம் தயார் நிலையில் 52 இயந்திரங்களும் என 313 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 261 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 20 சதவீதம் தயார் நிலையில் 52 இயந்திரங்களும், 261 விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதம் தயார் நிலையில் 78 இயந்திரங்கள் என 339 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 966 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
குமாரபாளையம் தொகுதியில், 279 வாக்குச்சாவடிகளின் பயன்பாட்டிற்காக 279 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 20 சதவீதம் தயார் நிலையில் 55 இயந்திரங்களும் என 334 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 279 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 20 சதவீதம் தயார் நிலையில் 55 இயந்திரங்களும், 279 விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதம் தயார் நிலையில் 83 இயந்திரங்கள் என 362 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 1,029 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 1,628 வாக்குசாவடிகளில் 4,884 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தயார் நிலையில் 1,130 இயந்திரங்கள் என மொத்தம் 6,014 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் கணினி மூலம், சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணி, கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், திட்ட இயக்குநர், வடிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்தீபன், கந்தி, பிரபாகரன், முத்துராமலிங்கம், பாலாகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு appeared first on Dinakaran.