×

பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது: 3 கிலோ பறிமுதல்

 

விழுப்புரம், மார்ச் 23: அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று விக்கிரவாண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் சந்தேகத்தின்பேரில் பயணித்த 3 வாலிபர்களிடம் சோதனைசெய்ததில் அவர்களிடம் 3 கிலோ 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை பேருந்தில் இருந்து இறக்கி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ருதிஷ்(26), செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் தினேஷ்(27), குருகணேஷ் நகர் வசந்த்(21) என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் சென்னையில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது: 3 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram Prohibition Enforcement Division ,Vikravandi ,Chennai ,Trichy ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...