×

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு

மதுரை, மார்ச் 23: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக அனைத்து காய்கறிகள் விலையும் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு மாதமாக தக்காளி விலை கிலோ ரூ.10 முதல் ரூ.25 வரையும், 15 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ.120 முதல் ரூ.230 வரையும் விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் தலைவர் சின்னமாயன் கூறுகையில், ‘‘தற்போது தேனி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. மேலும் அங்கு விளைச்சல் அதிகமாக இருப்பதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது’’ என்றார்

மதுரை மார்க்கெட்டில் காய்கறிகள் விலைப் பட்டியல் (கிலோவிற்கு): சின்ன வெங்காயம்-ரூ.25, பெரிய வெங்காயம்-ரூ.30, சுரைக்காய்-ரூ.20, கருவேப்பிலை ஒரு கட்டு-ரூ.60, புதினா ஒரு கட்டு-ரூ.20, மல்லி -ரூ.40, இஞ்சி-ரூ.150, மிளகாய்-ரூ.40, கத்தரிக்காய்-ரூ.30, பாகற்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.40, சீனி அவரக்காய்-ரூ.25, மாங்காய்-ரூ.60, பீன்ஸ்-ரூ.80, நைஸ் அவரை-ரூ.35, முருங்கைக்காய்-ரூ.40, கேரட்-ரூ.30, பட்டாணி-ரூ.120, சவ்சவ்-ரூ.20, குடை மிளகாய்-ரூ.60, பீட்ருட்-ரூ.30, முள்ளங்கி-ரூ.20, மொச்சை-ரூ.50, டர்னிப்-ரூ.40, சேனை-ரூ.50, சேம்பு-ரூ.70, கருணை-ரூ.40, உருளை-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.30, கோவக்காய்-ரூ.30.

The post மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு appeared first on Dinakaran.

Tags : Madurai Central Market ,Madurai ,Maduthavani Central Market ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...