×

சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வோர் பாதுகாப்பின்றி நிறுத்தி விட்டு செல்லும் இருசக்கர வாகனங்கள் திருட்டு: பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை

 

செங்கல்பட்டு, மார்ச் 23: மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வோர் பாதுகாப்பின்றி நிறுத்திவிட்டு செல்லும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இந்த திருட்டு சம்பவங்களை தடுக்க பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பேருந்து நிலையம் பின்புறம் எம்.ஜி.சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்வதால் அதிகளவிலான திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்னை மற்றும் வெளியூர்களுக்கு செல்லவும், அதிகாலையில் வேலைக்கு செல்லும்போது மறைமலைநகர் பேருந்து நிலையம் பின்புறம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

வாகனங்கள் திருடுபோவதை தடுக்க மறைமலைநகர் பேருந்து நிலையம் பின்புறம் எம்.ஜி.சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தும் பொதுமக்கள் அவசரகதியில் மீண்டும் அதே இடத்தில் ஏராளமான இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். எனவே, இருசக்கர வாகன திருட்டை தடுக்கும் விதமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகே பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வோர் பாதுகாப்பின்றி நிறுத்தி விட்டு செல்லும் இருசக்கர வாகனங்கள் திருட்டு: பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Kiramalai Nagar National Highway ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து...