- உச்ச நீதிமன்றம்
- கவிதா
- சஞ்சீவ் கன்னா
- எம்.எம்.சுந்தரேஷ்
- பெலா எம்.
- கவிதா
- தெலுங்கானா
- முதல் அமைச்சர்
- சந்திரசேகர ராவ்
- திரிவேதி
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கவிதா சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜரானார். அப்போது,’கவிதா விசாரணை நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
இது இந்த நீதிமன்றம் பின்பற்றும் நடைமுறை. அந்த நெறிமுறையை மீற முடியாது’ என்றனர். இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற உள்ளதாக கபில் சிபல் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு கவிதா மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்,விசாரணை நீதிமன்றத்தில் கவிதா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தால் அதை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post கவிதாவுக்கு ஜாமீன் வழங்கஉச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.