கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ், வாக்காளர்களின் குறைகளை கேட்கவும், தேர்தலின்போது அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்காகவும் புதிய போர்ட்டலை கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கினார். இதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக் சபா (Log sabha ) என்ற பெயரில் போர்ட்டலை தொடங்கி குறைகளை நிவர்த்தி செய்வதாக கூறி மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் ஆளுநர் ஆனந்த போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது.
மக்களவை தேர்தல் செயல்பாடுகளில் ஆளுநர் சட்டவிரோதமாக தலையிடுவதாகவும், தேர்தல் பிரசாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவது அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
The post தேர்தல் நடைமுறையில் தலையிடுவதாக மேற்கு வங்க ஆளுநர் மீது திரிணாமுல் புகார் appeared first on Dinakaran.