×

சாமை ஓமக் குழம்பு சாதம்

தேவையானவை:

சாமை அரிசி
சாதம் – 1 கப்,
ஓமம் – 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு, உளுந்தம் பருப்பு,
கடலைப்பருப்பு – தலா ½ டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை,
வெந்தயம் – ¼ டீஸ்பூன்,
அப்பளம் – 2,
புளிக்கரைசல் – 4 டேபிள்ஸ்பூன்,
நெய் – தேவைக்கு.

செய்முறை:

அடிகனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளித்து, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, ஓமம் சேர்த்து சிறு துண்டுகளாக செய்த அப்பளம், உப்பு சேர்த்து வதக்கவும். பின் கரைத்த புளிக்
கரைசல் ஊற்றி நன்கு புளி நெடி அடங்கிய பின் இறக்கவும். சாமை அரிசி சாதத்தை நெய் ஊற்றி நன்கு மசித்து ஓமக்குழம்பு ஊற்றி கலந்து சுடச்சுட பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். இது நல்ல
செரிமானத்தை கொடுக்கும்.

 

The post சாமை ஓமக் குழம்பு சாதம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு