- தில்லி
- எம்.எல்.சி.
- உச்ச நீதிமன்றம்
- விசாரணை நீதிமன்றம்
- புது தில்லி
- முதல் அமைச்சர்
- சந்திரசேகர ரா
- மலக்
- தெலுங்கானா
- பரத ராஷ்ட்ர சமிதி
- பிஆர்எஸ்
- கவிதை அமலாக்க துறை
- கவிதா
- தின மலர்
புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் கட்சி எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத் துறை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. தொடர்ந்து, கவிதாவை நாளை (மார்ச் 23) வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் இதுவரை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 128.79 கோடி சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தன் மீது வேண்டுமென்றே புனையப்பட்டுள்ள வழக்கு இது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை நாடவும், இதுதான் நீதிமன்ற நடைமுறை எனவும், இதனை மீற முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
The post டெல்லி மதுபான கொள்கை வழக்கு; எம்எல்சி கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு.! விசாரணை நீதிமன்றத்தை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.