×

கர்நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணை வெற்றி

பெங்களூரு: நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் இருந்து, ரீயூசபிள் லாஞ்ச் வெஹிக்கிள் (ஆர்எல்வி) என்ற ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. சாலகெரே ஓடுபாதையில் இன்று காலை 7 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது.

இந்த ஏவுகணை வாகனம் சினூக் ஹெலிகாப்டர் மூலம், 4.5 கிமீ உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட பில்பாக்ஸ் அளவுருக்களை அடைந்த பிறகு விடுவிக்கப்பட்டது. புஷ்பக் ராக்கெட்டின் வடிவமைப்பு விமானத்தைப் போன்றது. இது 6.5 மீட்டர் நீளமும் 1.75 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட்ம் மூலம் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பவும் முடியும் என்றும், விண்வெளி ஏற்படும் குப்பைகளை குறைப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்து.

The post கர்நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணை வெற்றி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Nataka ,ISRO ,Aeronautical Test Range ,Chitradurga, Karnataka ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி...