×

மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. கரும்பு விவசாயி சின்னத்திற்கு சிக்கல் ஏற்பட்டதால் சின்னம் இல்லாமல் நாம் தமிழர் கட்சி பரப்புரை செய்து வந்தது. மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதே போல சுயேட்சை கட்சிகளுக்கு எந்த எந்த சின்னம் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 23ம் தேதி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

The post மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MIKE SYMBOL ,SEEMAN'S ,NAM TAMIL ,LLAKAWA ,Chennai ,Election Commission ,Mike ,Seaman ,Nam Tamil Party ,Lok Sabha ,Tamil Nadu ,Puducherry ,Seiman ,party ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...