×

கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது

கோத்தகிரி : கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து கோடைக்காலம் நெருங்கவுள்ள நிலையில் பசுமை நிலைக்கு தேயிலைத் தோட்டங்கள் மாறி வருகிறது.கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்கோத்தகிரி, ஒன்னட்டி,கோடநாடு, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் நிலவிய உறைபனி மற்றும் நீர்பனி காரணமாக தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் கருகி பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது நிலவிய காலநிலை காரணமாக பகல் நேரங்களில் அதிக வெயிலின் தாக்கத்தாலும் இரவு நேரங்களில் நிலவிய பனியின் தாக்கத்தாலும் தேயிலை செடிகள் கருகி தேயிலை மகசூல் குறைந்து பாதிப்படைந்தது.இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வரை பனியின் தாக்கம் இருந்து வந்த நிலையில் தேயிலை மகசூல் குறைந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஓரிரு நாட்கள் பணிக்கு செல்லக்கூடிய நிலையும் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதம் முதல் காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் அவ்வப்போது இரவு நேரங்களில் மழையும் பெய்து வந்தது. இதனால் பனிக்காலங்களில் பாதிக்கப்பட்ட தேயிலை செடிகள் மீண்டும் பசுமைக்கு மாற ஆரம்பித்தது. தற்போது கோடைக்காலம் நெருங்கிய நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த வாரம் முதல் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மிதமான காலநிலை நிலவி வந்த நிலையில் கோடநாடு,சோலூர்மட்டம்,கைக்காட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான சாரல் பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மற்றும் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தொடர்ந்து கோடை மழை பெய்தால் பசுமைக்கு மாறியுள்ள தேயிலை செடிகள் அதிக மகசூல் தரவாய்ப்பு உள்ளதால் தேயிலை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Lower Kotagiri ,Onnatti ,Koda Nadu ,Solurmattam ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்