×

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் சீல் அகற்றம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றபட்டது. விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கடந்த ஆண்டு கோயில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் பூஜைகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

கோயிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையர் நியமிக்க வேண்டும். பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோயில் திறக்கப்படும் போது எந்த சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோயிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. கோயில் திறக்கப்பட்டாலும், இருதரப்பு மக்களும் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு கால பூஜை செய்ய சந்திரசேகர் என்ற அர்ச்சகர் நியமனம் செய்யபப்ட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.

 

The post விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் சீல் அகற்றம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thraupati Amman temple ,Malpadi ,Viluparam ,Tiruvpati Amman Temple ,Malpadi, Vilpuram district ,Thraupati ,
× RELATED மேல்பாடி அருகே கனமழையால் சேதமான நெற்பயிர்கள்