×

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி பொன்முடி இன்று அமைச்சர் ஆகிறார்?

சென்னை: பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால் அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘நாளை (இன்று) வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம்.

இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தனர். உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பொன்முடி அமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடி அமைச்சராகும் பட்சத்தில், அவருக்கு மீண்டும் உயர் கல்வி துறையே ஒதுக்க வாய்ப்புள்ளது.

 

The post உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி பொன்முடி இன்று அமைச்சர் ஆகிறார்? appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Ponmudi ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Governor ,R. N. Ravi ,DMK ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...