- ஜியோ சினிமா
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
- ஐபிஎல்
- தமிழ்நாடு
- அருண் கார்த்திக்
- அபினாவ் முகுந்த்
- அனிருதா ஸ்ரீகாந்த்
- விதுத் ராமகிருஷ்ணன்
- பாபா அபரஜித்
- பாபா இந்திரஜித்
* ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் ஜியோ சினிமாவும் தமிழில் ஒளிபரப்பு செய்கிறது. தமிழ் வர்ணனைக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் அருண் கார்த்திக், அபினவ் முகுந்த், அனிருதா ஸ்ரீகாந்த், வித்யுத் ராமகிருஷ்ணன், பாபா அபராஜித், பாபா இந்திரஜித் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் கிறிஸ் கேல், டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், இயான் மோர்கன், பிரட் லீ என வெளிநாட்டு நட்சத்திரங்களுடன் அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, சஞ்சனா கணேசன், சுஹைல் சந்தோக் என இந்திய நட்சத்திரங்களும் வர்ணனை செய்ய உள்ளனர். தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, ஹரியான்வி, குஜராத்தி, போஜ்புரி, இந்தியிலும் ஜியோ சினிமா ஒளிபரப்ப உள்ளது.
* ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற கோப்பை அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது சென்னை அணியின் சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். அப்போது தான் சிஎஸ்கே கேப்டன் மாற்ற விவகாரம் வெளியில் தெரிந்தது. மீண்டும் கேப்டன் பதவிக்காக காத்திருந்த ஜடேஜாவுக்கு இது ஏமாற்றமளித்துள்ளது.
* நேற்று நடந்த விழாவில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு பதிலாக, துணை கேப்டன் ஜிதேஷ் ஷர்மா பங்கேற்றார்.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் ஆடம் ஸம்பா (ஆஸி). இந்நிலையில், நடப்புத் தொடரில் இருந்து ஸம்பா விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
The post சில்லிபாயின்ட்.. appeared first on Dinakaran.