×

உலக சிட்டுகுருவிகள் தின விழா

களக்காடு,மார்ச் 22: களக்காடு அருகே திருக்குறுங்குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில், உலக சிட்டு குருவிகள் தின விழா நடந்தது. இதையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைதல், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர்கள் அருணா, பிரசாத், வள்ளி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சிட்டுகுருவிகள் தின விழா appeared first on Dinakaran.

Tags : World Sparrow Day ,Kalakadu ,Srinivasan Services Trust ,World Situ Sparrow Day ,Tirukurungudi ,TVS Government Higher Secondary School ,World Sparrow Day Festival ,Dinakaran ,
× RELATED களக்காடு அருகே பைக்குகள் திருட்டு