×

மக்களவை தேர்தலுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக போட்டி!!

சென்னை : அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வரும் மக்களவை தேர்தலில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் 16 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று வெளியிட்டார்.இதனிடையே இக்கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி அதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி கே.பழனிசாமியும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் நேற்று கையெழுத்திட்டனர். இந்நிலையில் எஞ்சியுள்ள தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர்களின் முழு பட்டியல்!!

01 தென் சென்னை – ஜெயவர்தன்
02 வட சென்னை – ராயபுரம் மனோ
03 காஞ்சிபுரம் – ராஜசேகர்
04 அரக்கோணம் – விஜயன்
05 கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
06 விழுப்புரம் – பாக்கியராஜ்
07 சேலம் – விக்னேஷ்
08 நாமக்கல் – தமிழ் மணி
09 ஈரோடு – அஷோக்
10 கரூர் – தங்கவேல்
11 சிதம்பரம் – சந்திரகாசன்
12 மதுரை – சரவணன்
13 தேனி – நாராயணசாமி
14 நாகை – சுர்ஜித் சங்கர்
15 ஆரணி – கஜேந்திரன்
16 ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

17 ஸ்ரீ பெரும்புதூர் – பிரேம் குமார்
18 வேலூர் – பசுபதி
19 திருவண்ணாமலை – கலியபெருமாள்
20 தருமபுரி – அசோகன்
21 பெரம்பலூர் – சந்திரமோகன்
22 கள்ளக்குறிச்சி – குமரகுரு
23 திருநெல்வேலி – சிம்லா முத்துசோழன்
24 தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
25 சிவகங்கை – சேவியர் தாஸ்
26 திருப்பூர் – அருணாசலம்
27 கோயம்புத்தூர் – சிங்கை ராமச்சந்திரன்
28 நீலகிரி – லோகேஷ்
29 மயிலாடுதுறை – பாபு
30 பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி
31 திருச்சி – கருப்பையா
32 கன்னியாகுமரி – பசிலியான் நசரேத்
33 புதுச்சேரி – தமிழ்வேந்தன்

கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியல்

புதிய தமிழகம் – தென்காசி – கிருஷ்ணசாமி

எஸ்டிபிஐ – திண்டுக்கல் – நெல்லை முபாரக்

தேமுதிக

திருவள்ளூர் (தனி),
மத்திய சென்னை,
கடலூர்,
விருதுநகர்,
தஞ்சாவூர்

The post மக்களவை தேர்தலுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக போட்டி!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Puducherry ,Chennai ,Secretary General ,Akkatsi Edapadi Palanisami ,Adamugawa ,Atamuga ,Demutika ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...