×

மராட்டியத்தில் 2 முறை, அருணாச்சலப்பிரதேசத்தில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி

 

மும்பை: மராட்டியத்தில் 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் ஹிங்கோலியில் காலை 6.08 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளது. ஹிங்கோலியில் காலை 6.19 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6-ஆக பதிவானது. அதேபோல அருணாச்சலப்பிரதேசத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சலப்பிரதேச மாநிலம் கிழக்கு காமெங் பகுதியில் அதிகாலை 5.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2-ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு காமெங் பகுதியில் முன்னதாக அதிகாலை 3.40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.4-ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சலத்தின் மேற்கு காமெங் பகுதியில் நள்ளிரவு 1.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது-ரிக்டரில் 3.7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post மராட்டியத்தில் 2 முறை, அருணாச்சலப்பிரதேசத்தில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Maratiya ,Arunachal Pradesh ,Mumbai ,Marathia ,Hingoli, Marathia ,Earth ,Hingoli ,Marathi ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...