×

வெயிலுக்கு வசதியும், விசாரணையும் செட்டிகுளம் ஆல்பாபெட் ப்ளே பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்

 

பாடாலூர், மார்ச் 21: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மற்றொரு அங்கமாக செயல்படும் ஆல்பாபெட் ப்ளே பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார்.இயக்குநர் அரவிந்த் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாடாலூர் ஹெவன் லயன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரசிகுமார் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.இதையடுத்து மாணவ, மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வெயிலுக்கு வசதியும், விசாரணையும் செட்டிகுளம் ஆல்பாபெட் ப்ளே பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Chettikulam Alphabet Play School ,Badalur ,Alphabet Play School ,Little Flower Matric Higher Secondary School ,Chettikulam ,Aladhur Taluk ,Perambalur District ,Tamilvanan ,festival ,Kolakalam ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...