- காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரம்மோட்சவம்
- காரைக்கால்
- கைலாசநாதர் கோயில் பிரம்மோட்சவம்
- பிரம்மோத்ஸவ விழா
- காரைக்கால் சுந்தரம்பிகை
- உதானமார்
- கைலாசநாத
- கோவில்
- பிரம்மோத்சவம்
- தின மலர்
காரைக்கால்,மார்ச்21: காரைக்கால் கயிலாசநாதர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் சுந்தராம்பிகை உடனமர் கைலாசநாத ஆலயத்தின் பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஒன்றான தேரோட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர் புனரமைப்பு மற்றும் அழகுபடுதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை ஊழியர்கள் வெட்டி சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில் தேரோட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ள ஏதுவாக அன்று காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post காரைக்கால் கயிலாசநாதர் கோயில் பிரம்மோற்சவம்: தேர் கட்டமைப்பு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.