×

சிவகங்கை தொகுதியில் முதல் நாளில் மனுத்தாக்கல் இல்லை

 

சிவகங்கை, மார்ச் 21: சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் ஏப்.19ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடக்கிறது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கிறது. மார்ச் 30ம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். ஏப்.19ல் வாக்குப்பதிவும், ஜுன் 4 வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், சிவகங்கை ஆர்டி அலுவலகம் உள்ளிட்ட 6சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும். வேட்பு மனுவிற்கான விண்ணப்பம் பெறுதல் மற்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

நேற்று காலை 11மணி முதல், மாலை 3மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட முதல் நாளான நேற்று யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான 15 விண்ணப்பங்களை அவர்களது ஆதரவாளர்கள் பெற்றுச் சென்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டனர். 100மீ தூரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டது. மார்ச் 27 வரை மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post சிவகங்கை தொகுதியில் முதல் நாளில் மனுத்தாக்கல் இல்லை appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Sivagangai Lok Sabha ,Lok Sabha ,Tamil Nadu ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...