×

காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல் வழங்கப்படாத அரசியல் கட்சி பொது கூட்டங்கள் ஊர்வலங்களை ஒளிபரப்பக்கூடாது: தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டத்தில் முடிவு

காஞ்சிபுரம், மார்ச் 21: காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டத்தில்,காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல் வழங்கப்படாத அரசியல் கட்சி சம்பந்தமான ெபாது கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகளை அனுமதியின்றி ஒளி பரப்பக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் டிவி இயக்குபவர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திருமண மண்டபம், தங்கும் விடுதி, நகை அடகு தொழில் புரிவோர், அச்சகம், பிளக்ஸ், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார்.

பின்னர், கலெக்டர் கலைச்செல்வி மோகன் பேசியதாவது: நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில் ஊடகங்கள் அரசு அனுமதியின்றி அரசியல் கட்சி சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்கள் ஏதும் ஒளி பரப்பக்கூடாது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தலைமையில் அமைக்கப்பட்டுள்ள எம்சிஎம்சி குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்ப வேண்டும். ஒளிபரப்பிற்கு முன்னர் விளம்பரங்களுக்கு காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சி சம்பந்தமான பொது கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகளை அனுமதியின்றி ஒளிபரப்பக்கூடாது. பொதுக்கூட்டம் விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்களுக்கு நேரிடையாக அல்லது மறைமுகமாகவோ அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வில்லைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்று கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் செயல்பாட்டின்போது ஒரு வங்கி கணக்கிலிருந்து ஒரு மாவட்டம், தொகுதியில் உள்ள பல நபர்களின் கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் வழக்கத்திற்கு மாறான பணப்பரிமாற்றம் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கிவரும் அச்சகங்களின் உரிமையாளர்களின் தத்தமது அச்சகத்தில் அச்சடிக்கப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் பெயர் மற்றும் முகவரி முகப்பு பகுதியில் அச்சிடப்பட வேண்டும். எத்தனை எண்ணிக்கையில் நகல்கள் அச்சடிக்கப்பட்டன என்ற விவரங்களும் தெளிவாக தெரியும் வகையில் முன்பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், போலீஸ் எஸ்பி சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பார்த்தசாரதி, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். அ ச்சகங்களின் உரிமையாளர்களின் தத்தமது அச்சகத்தில் அச்சடிக்கப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் பெயர் மற்றும் முகவரி முகப்பு பகுதியில் அச்சிடப்பட வேண்டும். எத்தனை எண்ணிக்கையில் நகல்கள் அச்சடிக்கப்பட்டன என்ற விவரங்களும் தெளிவாக தெரியும் வகையில் முன்பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை
விதிமீறல்கள் பற்றிய தகவல் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு 24*7 அறைக்கு 1800-425-7087 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அடையாள அட்டை அவசியம்
திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்க உரிமையாளரும் வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் உரிய அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். மேலும் ஆதார், புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

The post காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல் வழங்கப்படாத அரசியல் கட்சி பொது கூட்டங்கள் ஊர்வலங்களை ஒளிபரப்பக்கூடாது: தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : video monitoring committee ,norms ,Kanchipuram ,TV Monitoring Committee ,Kanchipuram Collector ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...