×

மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமனம் தேர்தல் செலவினங்களை பார்வையிட

வேலூர், மார்ச் 21: வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை பார்வையிட மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை பார்வையிட மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக ரோஹினி, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அமித் கோயல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் செலவினப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமனம் தேர்தல் செலவினங்களை பார்வையிட appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Parliamentary ,Election Commission of India ,Vellore Parliament ,
× RELATED வாக்களித்தவர்களில் பெண்களே அதிகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில்