×

கஷ்டமான முடிவு எடுத்துள்ளார் தமிழிசை: அண்ணாமலை பேட்டி

சென்னை: பாஜவில் தமிழிசை இணைந்த நிகழ்வில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசியதாவது: 25 வருடங்களாக பாஜவில் தமிழிசை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஒரு மாநிலமின்றி இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்து பெரிய பெயர் வாங்கியுள்ளார். கடுமையான சூழ்நிலையில் தெலங்கானா ஆளுநராக இருந்த போதும் தனது கண்ணியத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் விட்டு கொடுக்காமல் ஆளுநர் பதவிக்கு இருக்கக்கூடிய அழகோடு பணியாற்றிவிட்டு கஷ்டமான முடிவை எடுத்துள்ளார்.இன்றைக்கு தன்னை ஒரு பாஜ தொண்டனாக, சாமானிய உறுப்பினராக பாஜ அலுவலகத்தில் கட்சியில் இணைந்துள்ளார். தமிழிசை சவுந்தர்ராஜன் எந்த உறுப்பினர் எண்ணிலிருந்து விட்டு சென்றாரோ அதே எண்ணுடன் உறுப்பினர் அட்டை வழங்கப்படும். அவரின் வருகை என்பது தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலும் திரும்பி பார்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. ஆளுநர் பதவியை விட்டு அரசியலுக்கு வருவது என்பது அந்த அளவிற்கு மக்கள் மீதும், பாஜ மீதும் அவருக்கு இருக்கும் அன்பை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கஷ்டமான முடிவு எடுத்துள்ளார் தமிழிசை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Annamalai ,Chennai ,Bahia ,Tamil Union ,Bajaj ,Telangana ,Tamil ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...