×

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 தவணையில் வழங்கப்படும்

சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில், இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நடைமுறையை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 தவணையில் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...