×
Saravana Stores

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்ட குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 20 நாட்கள் கடந்தும் இன்னும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்நிலையில் ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு என்ஐஏ அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு கோவை கார் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதான 5 பேர் மற்றும் கேரளா பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாஸ் கொலை வழக்கில் கைதான 2 பேர் சிறையில் உள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்த பெங்களூரு என்ஐஏ அதிகாரிகள், இது தொடர்பாக தமிழ்நாடு என்ஐஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மற்றும் கேரளா மாநிலம், பாலகாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை appeared first on Dinakaran.

Tags : NIA ,Coimbatore ,Bengaluru ,Rameswaram Cafe Otta ,Bangalore ,Rameswaram Hotel ,
× RELATED வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்