×

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக அமமுக இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கையெழுத்து உடன்பாடு இயற்றப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பாக பாஜக அலுவலகத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். இந்நிலையில் தற்போது பாஜக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தென்மாவட்டங்களில் உள்ள 2 தொகுதிகளை பாஜகவிடம் அமமுக கேட்டு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த 2 தொகுதிகள் எவை என பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பாஜக தலைமையிலான கூட்டணியில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு சுமூக பேச்சுவார்தை எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. இதையடுத்து ஓபிஎஸ், ஜான் பாண்டியன் மற்ற கட்சிகளுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான கையெழுத்து உடன்பாடு இயற்றப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Amukh ,BJP ,Chennai ,Kamalalaya ,Thiagarayar, Chennai ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...