×

கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை சீசனை வரவேற்க பூத்து குலுங்கும் பெல் பிளான்ட்

*சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் கோடை சீசனை வரவேற்கும்விதமாக பூத்துள்ள மஞ்சள் நிற டேக்கமோ ஸ்டேன்ஸ் பெல் பிளான்ட் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற உள்ளது. இந்த சீசனில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும்விதமாக பல்வேறு விதமான வண்ண மலர்கள் மலைப்பகுதிகளில் பூத்து குலுங்குகின்றன.

ஏற்கனவே ஜக்கரண்டா மலர்கள் பூத்து குலுங்கும் நிலையில் தற்போது மஞ்சள் நிற டேக்கமோ ஸ்டேன்ஸ் பெல் பிளான்ட் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மணி போன்ற உருவ அமைப்புடைய மஞ்சள் மலர்கள் மரம் முழுவதும் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

The post கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை சீசனை வரவேற்க பூத்து குலுங்கும் பெல் பிளான்ட் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Princess of the Hills' ,Dindigul district ,
× RELATED மலைக்கிராமங்களுக்கு குதிரை,...