×

தமிழர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார் ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா!

 

டெல்லி: கண்டனம் வழுத்தத்தை அடுத்து ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார். பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த 1ம் தேதி திடீர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இந்துத்துவா அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் ஷோபா தமிழ்நாட்டில் இருந்து பெங்களுருவில் குண்டு வைப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

மேலும் கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில மக்களையும் இழிவுப்படுத்தும் வகையிலும் அவர் பேசினார். தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கண்டனம் வழுத்தத்தை அடுத்து ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார். இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.

அதில்; தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு தமது கருத்தை தெளிவுப்படுத்த விரும்புவதாக ஷோபா குறிப்பிட்டுள்ளார். எனது கருத்துகள் பிறருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது. குண்டுவெடிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கோருகிறேன். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி எடுத்தவர்கள் குறித்து மட்டுமே பேசியதாக விளக்கம் அளித்தார்.தமிழ்நாட்டில் யாரேனும் காயமடைந்திருந்தால் இதயத்தில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். குண்டுவெடிப்பு தொடர்பான கருத்தை திரும்பப்பெறுவதாகவும் ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார்.

The post தமிழர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார் ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா! appeared first on Dinakaran.

Tags : Union BJP ,Minister ,Shoba ,Tamils ,Delhi ,Shoba Karanthalaje ,Rameshwaram ,Bangalore ,NIA ,
× RELATED அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை...