×

பறக்கும் படைகளின் செயல்பாடுகள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிப்பு: கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

 

விருதுநகர், மார்ச் 20: தேர்தல் பறக்கும் படைகளின் செயல்பாடுகள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுவதை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களைகட்ட துவங்கி உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் மார்ச் 27, வேட்புமனு பரிசீலனை மார்ச் 28, இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30ல் வெளியிடப்பட உள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ஒரு பறக்கும்படை, ஒரு நிலை கண்காணிப்பு குழு, ஒவ்வொரு குழுவும் 8 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் 3 குழுக்கள் என மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் செயல்பாடுகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களை கண்காணிக்கும் ஜிபிஎஸ் முறையின் செயல்பாட்டை கலெக்டர் ஜெயசீலன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் விதிமீறல் புகார்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

The post பறக்கும் படைகளின் செயல்பாடுகள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிப்பு: கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு