×

பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை அப்புறப்படுத்த விழுப்புரம் குழு வருகை

திருப்புவனம், மார்ச் 20:திருப்புவனம் பகுதியில் பழையூர், நெல்முடிக்கரை, திருப்புவனம் புதூர், வெள்ளக்கரை, கலியாந்தூர், வயல்சேரி, பிரமனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன .இதனால் பாதிப்புக்குள்ளான பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியிலிருந்து மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

இந்நிலை நீடித்தால் திருப்புவனம் பகுதியில் நெல், கரும்பு, வாழை விவசாயம் முற்றிலும் சாகுபடி செய்ய முடியாத அபாயம் ஏற்படும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் திருப்புவனம் தாலூக அலுவலகம் முன்பாக விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, காவல் துறை, வனத்துறை, விவசாயிகள் சங்கம், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. குழுவின் சாரபில் விழுப்புரம் மாவட்டத்தில் பன்றிகளைப் பிடிக்கும் குழுவினர் வரவழைக்கப்பட்டு முதற்கட்டமாக திருப்புவனம் புதூர், பழையூர் ஆகிய பகுதிகளில் பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் குழு இரண்டொரு நாளில் இப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக அலுவலர்கள் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.

The post பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை அப்புறப்படுத்த விழுப்புரம் குழு வருகை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Tiruppuvanam ,Palaiyur ,Nelmudikkarai ,Vellakarai ,Kaliandur ,Vyalsery ,Bramanur ,Villupuram Group ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...